ADDED : நவ 17, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆயுதப்படை மைதானத்தில், நவ. 18 (நாளை)காலை 10:00 மணிக்கு 14 போலீஸ் வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இன்று (நவ. 17) மாலை 5:00 மணி வரை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள 6 டூவீலர்கள், 8 நான்கு சக்கர வாகனங்களை பார்வையிடலாம்.
ஏல நாளில் காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் ஆதாருடன்ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., கணக்கு உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்தவர்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் முழுத்தொகையும் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.

