/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்.,குடன் கூட்டணி குறித்து பேச்சு வதந்தி த.வெ.க., நிர்மல் குமார் தகவல்

ADDED : நவ 17, 2025 02:14 AM
மதுரை: ''காங்.,குடன் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூட்டணி குறித்து பேசி வருவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி. கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படும்,'' என, மதுரையில் த.வெ.க., மாநில இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: த.வெ.க.,வின் கொள்கை, அரசியல் எதிரிகள் யார் என்பதை தெரிவித்து விட்டோம். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம். தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் இல்லாததால் அவர்கள் குறித்து பேசி மக்களை குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., உட்பட பா.ஜ., வுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.
விஜய் தான் முதல்வர் வேட்பாளர். த.வெ.க.,வின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
நடிகர் அஜித், விஜய் நண்பர். விஜய் குறித்து சரியான விளக்கம் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி என்றார்.