ADDED : மார் 18, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் பொதுமக்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து போலீசார் சாலை சந்திப்புகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்வினியோகம், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகம், அண்ணா பஸ்ஸ்டாண்ட் பகுதியில் எஸ்.ஐ., கணேசன், பூவலிங்கம் ஆகியோர் வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். விபத்துகளை தடுக்க ஹெல்மெட் அணிவது, சாலை விதிகளை கடை பிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.