/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்டேஷன் வளாகத்தில் டூவீலர் ஸ்டாண்ட் நடத்தும் போலீசார்
/
ஸ்டேஷன் வளாகத்தில் டூவீலர் ஸ்டாண்ட் நடத்தும் போலீசார்
ஸ்டேஷன் வளாகத்தில் டூவீலர் ஸ்டாண்ட் நடத்தும் போலீசார்
ஸ்டேஷன் வளாகத்தில் டூவீலர் ஸ்டாண்ட் நடத்தும் போலீசார்
ADDED : அக் 14, 2025 04:18 AM

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர் ஸ்டாண்ட் நடத்துகின்றனரோ என கருதும் அளவுக்கு போலீஸ் வளாகம் முழுவதும் யார், யாரோ வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
பஸ்ஸ்டாண்ட் அருகே நகர் போலீஸ் ஸ்டேஷன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், மற்றும் போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. ஐந்து ஏக்கருக்கும் கூடுதலான இடத்தில் அலுவலகங்கள் 20 சென்ட் அளவிலும், குடியிருப்புகள் இரண்டு ஏக்கர் அளவிலும் உள்ளன.
மற்ற இடங்கள் காலியிடங்களாக விடப்பட்டுள்ளன. வளாகங்களுக்குள் வாகனங்கள் வராமல் இருக்க தாலுகா போலீஸ், டவுன் போலீஸ், போக்குவரத்து போலீஸ் ஆகிய இடங்களில் கேட்கள் உள்ளன. போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள காலி இடம் முழுவதையும் தனியார் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. அனைத்து இடங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட வெளியூருக்கு செல்வோர் இங்கு வாகனங்களை அனுமதியின்றி நிறுத்திச் செல் கின்றனர்.
பாதுகாப்பில் இருக்கும் போலீசார் இதுபற்றி கேட்டால், போலீஸ்காரர்களின் உறவினர்கள் எனக் கூறிச் செல்கின்றனர். வாகனங்கள் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. போலீசாரின் வளாகத்திலேயே, அனுமதியின்றி ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருப்பது, மிகப்பெரிய டூவீலர் ஸ்டாண்ட் நடத்துவது போன்று உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விதிமீறி நிறுத்தியுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.