/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசியல் உள்நோக்கம் கொண்டது: கிருஷ்ணசாமி
/
அரசியல் உள்நோக்கம் கொண்டது: கிருஷ்ணசாமி
ADDED : டிச 05, 2025 07:23 AM
மதுரை: புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளதாவது:
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக டிச.,1ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம்.
அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது.
மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்துாணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்னை எழுந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் துாணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகும்.
மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி 144 தடை உத்தரவு விதித்து, தீபத்துாணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்னையை பெரிதாக்கியது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

