ADDED : ஜன 11, 2025 05:06 AM
மதுரை : மதுரையில் அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
* வேளாண் துறை சார்பில் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமையில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. துணை இயக்குநர்கள் ராணி, சாந்தி, மேரி ஐரின் ஆக்னிட்டா, வாசுகி முன்னிலை வகித்தனர். ஆட்சி அலுவலர் உமா, உதவி இயக்குநர் செந்தில்குமார், கண்காணிப்பாளர்கள் மணிமேகலை, திருச்செல்வி, செல்லக்கண்ணு, சரவணன், உதவி கணக்கு அலுவலர் வேல்ராஜ், மாவட்ட திட்ட ஆலோசகர் விவேகானந்தன், வேளாண் அலுவலர்கள் பானுமதி, முத்துலட்சுமி, செல்வராஜ், கருப்பசாமி கலந்து கொண்டனர். லக்கி கார்னர் போட்டியில் ஆண்களில் நசீர்ராஜா முதலிடம், ரசீத் கான் 2ம் இடம், பிரசன்னா தேவி முதலிடம், சாந்தி 2ம் இடம் பெற்றனர்.
* தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் துணை இயக்குநர் பிரபா தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ரேணுகாதேவி, உதவி இயக்குநர்கள் ஸ்ரீமீனா, தமிழ்ச்செல்வி, ரிஸ்வானா பர்வீன், சரவணப்ரியா, பேபி, பிரதீபா, புவனேஸ்வரி, பிரிஸ்கா பிளேவியா கலந்து கொண்டனர். லக்கி கார்னர், பலுான் ஊதுதல், மியூசிக்கல் சேர், மைம், பாட்டுக்குப் பாட்டு, பக்கெட் பால் போட்டிகள் நடத்தப்பட்டன.
*பொதுப்பணித்துறை வளாகத்தில் நீர்வளத்துறை சார்பில் நடந்த பொங்கல்விழாவில் செயற்பொறியாளர் பாரதிதாசன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் அன்பரசு, சுப்ரமணியன், உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
*கால்நடைத்துறை சார்பாக மதுரை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. மண்டல இணை இயக்குநர் சுப்பையன், துணை இயக்குநர் நந்தகோபால், உதவி இயக்குநர்கள் பழனிவேலு, என்.ஆர். சரவணன், கிரிஜா, எம்.எஸ்.சரவணன், அலுவலக, அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.