
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் கிழக்குத் தெருவில் உள்ள சோலை அழகி அம்மன் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட தொட்டிச்சி சோலை அழகி அம்மன் கோயில் பொங்கல் உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் கோயில் முன் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று அம்மனுக்கு சக்தி கிடா வெட்டினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நாட்களில் இரவு கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.