ADDED : பிப் 06, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விளாங்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பராமரிப்பு பணிகளுக்கான பூமிபூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது.
ரூ.9.90 லட்சத்தில் வர்ணம் பூசுதல், வகுப்பறை பராமரிப்பு, கழிப்பறைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கவுள்ளன. இந்நிகழ்வில் மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் மாரிமுத்து, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் கருப்பையா, கவுன்சிலர் நாகஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.