/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு தபால் ஓட்டு
/
மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு தபால் ஓட்டு
ADDED : மார் 20, 2024 06:18 AM
மதுரை : லோக்சபா தேர்தலையொட்டி  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது நிறைவடைந்த 22 ஆயிரத்து 592 மூத்த குடிமக்களும், 14 ஆயிரத்து 6 மாற்றுத்திறனாளிகளும் ஓட்டுப்பதிவு நாளான ஏப்.,19 ல் ஓட்டுச் சாவடிக்கு செல்ல தேவையில்லை. அவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுகளை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் (பி.எல்.ஓ.,) வழங்கப்படும் 12 டி படிவத்தை பூர்த்தி செய்து, மார்ச் 24 க்குள் நேரில் சென்று வழங்கி தபால் ஓட்டளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

