ADDED : செப் 05, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோட்ட அளவிலான தபால்துறை குறைதீர் கூட்டம் செப்., 18ல் காலை 11:00 மணிக்கு மதுரை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
தபால்துறை சம்பந்தமான குறைகளை முழுமுகவரியுடன், தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புநர், பெறுநர் விலாசம் போன்ற தகவல்களுடன், முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செப்., 12க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.