ADDED : ஆக 08, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. செங்கப்படை வழியாக கரிசல்காளான்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு இந்த பைப் லைன் செல்கிறது. பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் கிராமத்திற்கு வரவேண்டிய டவுன் பஸ் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் நடந்து சென்று பஸ் ஏறும் சூழ்நிலை உள்ளது. பள்ளத்தால் இரவில் வரும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளத்தை முழுமையாக மூட வேண்டுமென சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.