நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் ஜோசப் நகர், மல்லிகை தோட்டம், ஈஸ்வரி தெரு, சரிதா பாய் பள்ளி பகுதிகளில் முல்லைப் பெரியாறு குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறிய தண்ணீர், மழை நீரால் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அவதி அடைந்தனர். அப்பகுதிகளை கவுன்சிலர் சுவேதா நேற்று பார்வையிட்டு பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி பணியாளர்களிடம் கூறினார். அந்தப் பள்ளங்களில் மணல் கொட்டி சீரமைக்கப்பட்டது.

