ADDED : அக் 18, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள பள்ளங்களால் போக்குவரத்து பாதிக்கிறது.
மதுரையில் இருந்து திண்டுக்கல், பெரியகுளம், கோயம்புத்துார், திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. பஸ்கள் நுழையும், வெளியேறும் பகுதியில் ரோட்டின் நடுவே பள்ளங்கள் உள்ளன. இதில் மழைநீர் தேங்கி உள்ளது.
பஸ்கள் பள்ளத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது. மேலும் பள்ளங்களும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன. டூவீலரில் செல்வோர் அடிக்கடி விழுந்து எழுந்து செல்கின்றனர். பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.