/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளங்களால் வாகனங்களுக்கு ஆபத்து
/
பள்ளங்களால் வாகனங்களுக்கு ஆபத்து
ADDED : பிப் 26, 2026 06:15 AM

வாடிப்பட்டி: சமயநல்லுார் - பரவை ரோட்டில் உள்ள பள்ளங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கோயம்புத்துார், சேலம் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள், வாகனங்கள் சமயநல்லுார்- பரவை வழியாக மதுரை வந்து செல்கின்றன. நான்கு வழிச்சாலையில் பறந்து வரும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சமயநல்லுருக்குள் இறங்குகிறது. சமயநல்லுார் பஸ் ஸ்டாப், ஊர்மெச்சிகுளம், பவர் ஹவுஸ், பரவை கண்மாய் கரை ரோடு, பஸ் ஸ்டாப், அண்டர் பாஸ் பாலம் வரை ரோட்டின் இருபுறமும் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே 'மெகா சைஸ்' பள்ளங்கள் உள்ளன.
த.வெ.க., நிர்வாகி அருண்குமார் கூறியதாவது: தினமும் விபத்து அச்சத்துடன் ரோட்டில் செல்ல வேண்டி உள்ளது. பள்ளங்களை தவிர்க்க செயல்படும்போது, எதிரே வரும் வாகனங்கள் மோதுகின்றன. பள்ளங்களால் டூவீலரில் வருவோர் தடுமாறுகின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதித்து நேரம் விரயமாகிறது. வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள், ரோட்டில் பிரதிபலிப்பான்கள் பதித்து ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

