/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏழைப் பெண்களுக்கு கோழி வளர்க்க மானியம்
/
ஏழைப் பெண்களுக்கு கோழி வளர்க்க மானியம்
ADDED : அக் 07, 2024 05:35 AM
மதுரை: தமிழக அரசு ஊரகப் பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் பலனடையும் வகையில், 40 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை ஐம்பது சதவீத மானியத்தில் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
பயனாளி கணவரை இழந்தவர், கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் முன்னுரிமை உண்டு. கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவர், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். சொந்த செலவில் ரூ.3200 செலுத்தி கோழிகளை கொள்முதல் செய்பவராக இருக்க வேண்டும். அதற்கான சுயசான்று வழங்கியபின் 50 சதவீத மானியம் (ரூ.1600) பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்த சுயஉதவிக்குழ பெண்களுக்கும் முன்னுரிமை உண்டு. இதற்கு முன்பு இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு வழங்கும் திட்டம், கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது. தேர்வாகும் பயனாளிகளில் 30 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றியத்திற்கு நுாறு பேர் வீதம் மதுரை மாவட்டத்தில் 1300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கூறிய தகுதியுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் அந்தக் கால்நடை அலுவலகங்களிலேயே அக்.22க்குள் வழங்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.