/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்அழுத்த பிரச்னைக்கு மின்வாரியம் உடனடி தீர்வு * தினமலர் செய்தி எதிரொலி
/
மின்அழுத்த பிரச்னைக்கு மின்வாரியம் உடனடி தீர்வு * தினமலர் செய்தி எதிரொலி
மின்அழுத்த பிரச்னைக்கு மின்வாரியம் உடனடி தீர்வு * தினமலர் செய்தி எதிரொலி
மின்அழுத்த பிரச்னைக்கு மின்வாரியம் உடனடி தீர்வு * தினமலர் செய்தி எதிரொலி
ADDED : செப் 27, 2024 06:51 AM
மதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் குறைந்த மின்அழுத்தத்தால் பாதித்த கிராமங்களில் மின்வாரியத்தினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.
கல்மேடு, கொண்டபெத்தான், களஞ்சியம், கருப்பிள்ளையேந்தல், இளமனுார், அன்னை சத்யாநகர் பகுதிகளில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக ஆண்டுக்கணக்கில் அப்பகுதியினர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இரவில் படிக்கவோ, துாங்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.
தெருவிளக்கு எரியாமல் நடமாடவே அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து மின்வாரியத்தினர் உடனே நடவடிக்கை எடுத்தனர். மண்டல தலைமை பொறியாளர் மங்களநாதன், கண்காணிப்பு பொறியாளர் சோபியா ஏற்பாட்டில் செயற்பொறியாளர் கண்ணன், உதவிப்பொறியாளர் சுரேஷ் ஆகியோர் அக்கிராமங்களை ஆய்வு செய்தனர்.
மின்அழுத்த குறைபாட்டை போக்க கல்மேடு, கொண்டபெத்தான் கிராமங்களில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டன.
மேலும் சில இடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து அதில் டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கருப்பிள்ளையேந்தல் கிராமத்தில் இடம் கிடைக்காததால் அப்பணியில் சுணக்கம் உள்ளது.
செயற்பொறியாளர் கண்ணன் கூறுகையில், ''இரு கிராமங்களில் 180 வோல்டேஜ் மின்அழுத்தமே இருந்தது. இதனால் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து அதனை 223 வோல்டேஜூக்கும் கூடுதலாக அதிகரித்தோம்.
மற்ற பகுதிகளிலும் டிரான்ஸ்பார்மர் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்'' என்றார்.

