UPDATED : ஜூலை 06, 2026 07:22 PM
ADDED : ஜூலை 06, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஊமச்சிக்குளத்தில் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுகள் நடந்தபோது மின்தடை ஏற்பட்டது. சில மணி நேரத்தில் சரியான பின் மீண்டும் பதிவுகள் துவங்கின. இவ்வாறு மாலை 5 மணிக்குள் ஆறுமுறை மின்தடை ஏற்பட்டு பதிவுப் பணிகள் பாதித்தன. இதனால் பத்திரப்பதிவுக்காக வந்திருந்தோர் அவதிப்பட்டனர்.
அவர்கள் கூறுகையில், ''சர்வர் பிரச்னையால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பதிவுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
தினமும் நுாற்றுக்கணக்கானோர் பதிவுக்கு வருவதால் அதிக வருவாய் கிடைக்கிறது. இதில் ஒரு நாள் வருவாயில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி விடலாம். அவ்வாறு செய்யாமல் மின்தடையை காரணம் காட்டுவது சரியா. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
