/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காய்கறி மார்க்கெட்டில் மின் இணைப்பு துண்டிப்பு
/
காய்கறி மார்க்கெட்டில் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஆக 22, 2025 03:02 AM

மேலுார்: மேலுார் நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இம்மார்க்கெட்டில் ஒரு வரிசைக்கு 45 கடைகள் வீதம் 90 தரைக்கடைகள், கழிப்பறை மின் மோட்டார், விளக்கு ஒரு இணைப்பாகவும், 44 ஷட்டர்ஸ் கடைகள் மற்றொரு மின் இணைப்பு என இரண்டு மின் இணைப்புகள் உள்ளன.
இதில் ஒப்பந்ததாரர் 10 மாதம் மின் கட்டணம் செலுத்ததால் 90 தரைகடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மார்க்கெட் சங்க துணைச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் காய்கறிகளை எடை போடும் மின்னணு தராசுகளை பயன்படுத்த முடியவில்லை. கழிப்பறை மோட்டாருக்கு மின்சாரம் இல்லாததால் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல் தொற்று நோய்களுக்கு ஆளாகிறோம். இருட்டில் வியாபாரம் செய்கிறோம். ஒவ்வொரு கடைக்கும் தனிமீட்டர் வைக்க வேண்டும் அல்லது சோலார் பேனல் அமைத்து தர வேண்டும் என்றார்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில் ''ஒப்பந்ததாரர் மூலம் உடனடியாக மின்கட்டணம் ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.