ADDED : செப் 23, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் இன்று (செப்.23) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வினியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களால் இந்த பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்படுகிறது. இப்பணிகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இதனால் இன்றைய மின்தடையும் ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல மின்வினியோகம் நடைபெறும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.