ADDED : அக் 16, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : கோல்கட்டா பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோல்கட்டாவில் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாக்டர்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியின் முதுநிலை பயிற்சி டாக்டர்கள் 6 பேர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு சக பயிற்சி டாக்டர்கள், அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.