/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டவுன்ஸ் நோயில் இருந்து கர்ப்பிணிகள் தப்பிக்க
/
டவுன்ஸ் நோயில் இருந்து கர்ப்பிணிகள் தப்பிக்க
ADDED : ஜூன் 30, 2025 03:02 AM
டவுன்ஸ் நோய் கூட்டறிகுறி என்பது ஒருவித மரபணுக் குறைபாடு. நம் உடலின் உயிர் அணுக்களில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 21-வது ஜோடியில், ஒன்று மட்டும் அதிகம் இருந்தால் அது டிரைசோமி21 எனப்படும். இதனால் டவுன்ஸ் கூட்டறிகுறி ஏற்படும்.
இந்தக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முகத்தின் அமைப்பில் மாறுதல், உடல், மனவளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளாறு இருக்கும். 800 குழந்தைகளில் ஒருவருக்கு இப்பாதிப்பு வாய்ப்பு உள்ளது.
டாக்டர்இர்பானா நஸ்ரின் கூறியதாவது: இந்தக் குறைபாடுக்கு தாயின் முதிர் கர்ப்பம், பரம்பரையால் வரும் பாதிப்பு,உறவு முறை திருமணம், பிறப்புக்கு முந்தைய பராமரிப்பில் கவனமின்மை, புகை பிடித்தல், உடல் பருமன், சர்க்கரை வியாதி, சுற்றுச்சூழல் மாசு காரணிகளாக உள்ளன. இதன் பாதிப்பு ஆயுள் முழுவதும் நீடிக்கும். எனவே, கர்ப்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை முறையை தேர்வு செய்ய வேண்டும்.
11 வாரம் முதல் 14 வது வாரம் வரை உள்ள கர்ப்ப காலத்தில், முன் ஆய்வுப் பரிசோதனைகளான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மூக்குத்தண்டின் அளவு,தாயின் டபுள் மார்க்கர், என்.ஐ.பி.டி., முறைப்படி செய்ய வேண்டும். இந்த பரிசோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக இருக்கும் பட்சத்தில், கர்ப்ப காலத்தில், நஞ்சுக் கொடியின் திசு எடுத்து பரிசோதித்தல், 16 வாரங்களுக்கு பிறகு கருப்பை திரவத்தை எடுத்து, பரிசோதித்தல் பரிசோதனைகள் செய்யலாம்.
இவற்றின்முடிவுகளையும், தொடர் சிகிச்சைகளையும் மகப்பேறு மருத்துவர் ஆலோசனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்தக் குறைபாடோடு பிறக்கும் குழந்தைகளுக்கு கல்வி, மன உறுதி, வேலை வாய்ப்பு, வாழ்வியல் பயிற்சி, நிரந்தரமான குடும்ப வாழ்க்கையை அமைத்துத் தர சமுதாயம் உறுதி கொள்ள வேண்டும். மீரா 4டிஸ்கேன் மையத்தில்இதற்கான அனைத்து பரிசோதனைகளும், நவீன மருத்துவ கருவிகளுடன் செய்யப்படுகிறது என்றார்.
- -டாக்டர் இர்பானா நஸ்ரின்
மதுரை
90428 83031