ADDED : நவ 18, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை ஆனைமலை டொயோட்டோ நிறுவனம் சார்பில் பிரிமியம் வாகனங்களின் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில் டொயோட்டோ நிறுவனத்தின் வெல்பையர், எல்.சி., 300, கேம்ரி உள்ளிட்ட கார்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் ரகுராம், சி.இ.ஓ., சேது ராஜன், துணைத் தலைவர் (விற்பனை) பேராட்சியப்பன், மேலாளர்கள் கார்த்திகேயன், சண்முகம், வினோத்குமார் கலந்து கொண்டனர்.
கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு வாகனங்களின் தன்மைகள், பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

