/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திரைத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
/
சித்திரைத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : மே 05, 2025 04:45 AM
அழகர்கோவில் :அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 39 உண்டியல்கள் கள்ளழகருடன் மதுரைக்கு புறப்பட தயார் நிலையில் உள்ளன.
மே 8 முதல் 17 வரை நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். இதற்காக மலையில் இருந்து மே 10 மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு புறப்படுவார். அவருடன் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல்கள், மாட்டு வண்டி வரும். இந்தாண்டு 39 உண்டியல்கள் சுத்தம் செய்து, வண்ணம் பூசி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தயாராக உள்ளன. கள்ளழகர் வாகனங்களும் பாலிஷ் செய்து தயாராக உள்ளன. கள்ளழகர் மதுரை வருவதற்கு சில தினங்களே உள்ளதால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.