ADDED : மார் 10, 2024 03:52 AM
மதுரை, : 'மன்னிக்கும் குணம் பெண்களுக்கு அதிகம்' என மதுரையில் பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். டாக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
தொழிலதிபர் சூரஜ் சுந்தர் ஷங்கர், முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா, மதுரை நார்த் வெஸ்ட் ரோட்டரி சங்க நிர்வாகி அழகப்பன் முன்னிலை வகித்தனர்.
சாதனை மகளிருக்கு 'ஸ்த்ரீ ரத்னா' விருது வழங்கி உதயகுமார் பேசியதாவது:
ஆண்கள் விருது பெறும் போது பெண்கள் கீழே அமர்ந்து பார்த்தனர்.
இன்று அவர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்துவதை ஆண்கள் கீழே அமர்ந்து பார்க்கிறோம். பெண்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது. இந்த பாராட்டு ஆசீர்வாதம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது.
மன்னிக்கும் குணம் பெண்களுக்கு அதிகம் உள்ளதால் தான் கருணையின் வடிவமாக போற்றுகிறோம் என்றார்.

