/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மக்களிடம் நம்பிக்கை குறைவதை தடுத்து இமேஜை காப்பாத்துங்க! அதிகாரிகள் இடம்மாறும்போது போலீசையும் மாற்றுங்க

ADDED : ஜூன் 15, 2024 06:32 AM

மதுரை : மதுரையில் போலீஸ் மீதான மதிப்பை காப்பாற்ற, அதிகாரிகளை இடமாற்றும் போது, அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாரும் இடமாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை விற்ற அப்பிரிவு ஏட்டு பாலமுருகன் 50, கைது செய்யப்பட்டார். இவர் இப்பிரிவில் 2022 முதல் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே இவர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, அண்ணாநகர் உதவிகமிஷனர் அலுவலகத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்துள்ளார். அங்கும் அவர் 'கைவரிசை' காட்டினாரா என விசாரணை நடக்கிறது.
போலீசார் கூறியதாவது: இவரைப் போன்றோரால் ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது. இதனால் போலீஸ் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.
போலீஸ் துறை கட்டுக்கோப்புடன் இருக்க அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். குறிப்பாக ஸ்டேஷன் மற்றும் அலுவலக அளவில் அதிகாரிகள் மாற்றப்படும்போது அங்கு 'கிளார்க்' வேலை செய்யும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள், போலீசார்இடமாற்றப்படுவதில்லை. அடுத்து பொறுப்பேற்கும் அதிகாரி, இவர்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்தி நாளடைவில் அதிகாரம் மிக்கவர்களாக மாறி விடுகின்றனர்.
போலீஸ் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒரே இடத்தில் நாலைந்து பேர் 'மாற்றுப்பணியாக' பணியாற்றுவது உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா எனத்தெரியவில்லை.
இதை தவிர்க்க அதிகாரிகள் இடமாற்றப்படும்போது, சிறப்பு எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகளும் வெவ்வேறு பிரிவுக்கும், ஸ்டேஷனிற்கும் இடமாற்றப்பட வேண்டும் என்றனர்.