/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வாங்கி கொடுங்க தலைமையாசிரியர்கள் ஆதங்கம்
/
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வாங்கி கொடுங்க தலைமையாசிரியர்கள் ஆதங்கம்
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வாங்கி கொடுங்க தலைமையாசிரியர்கள் ஆதங்கம்
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வாங்கி கொடுங்க தலைமையாசிரியர்கள் ஆதங்கம்
ADDED : ஜூன் 12, 2025 02:23 AM
மதுரை: மதுரையில் அரசு பள்ளி வளாகங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிடும் அதிகாரிகள், அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதை கண்டுகொள்வதே இல்லை என தலைமையாசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் ரூ. 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை மாதச் சம்பளத்தில் தற்காலிக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது.
ஆனால் 5 மாதங்களுக்கும் மேல் சம்பளம் வழங்கவில்லை. சில ஒன்றியங்களில் 7 மாதச் சம்பளம் நிலுவையில் உள்ளது. அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தலைமையாசிரியர்கள் சொந்த பணத்தை வழங்குகின்றனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் சந்திரன் கூறியதாவது: ஒன்றிய அலுவலகங்களில் இருந்து முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.
'பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்' என உத்தரவிடும் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களிடம் தெரிவித்தும் அவர்கள் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை. இதனால் பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இது மாணவர்களை பாதிக்கும் முன் துாய்மை பணியாளர்களுக்கான சம்பளம் பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.