/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைதிகளின் சம்பளம் 'சுருட்டல்' சிறை காவலர் 'சஸ்பெண்ட்'
/
கைதிகளின் சம்பளம் 'சுருட்டல்' சிறை காவலர் 'சஸ்பெண்ட்'
கைதிகளின் சம்பளம் 'சுருட்டல்' சிறை காவலர் 'சஸ்பெண்ட்'
கைதிகளின் சம்பளம் 'சுருட்டல்' சிறை காவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 11, 2025 05:16 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் கைதிகளுக்கு தரவேண்டிய சம்பளம் ரூ.2 லட்சத்தை தன் தேவைகளுக்கு பயன்படுத்திய காவலர் அலெக்ஸ் பாண்டியன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின்கீழ் திறந்தவெளி சிறை உள்ளது. நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு இங்கு விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்காக தினமும் சம்பளம் வழங்கப்படுகிறது. தண்டனை கைதிகள் பண்டிகை நாட்களில் பரோலில் குடும்பத்தினரை சந்திக்க செல்லும்போது சம்பளத்தை பெற்றுச்செல்வது வழக்கம். சமீபத்தில் நடந்த தணிக்கை ஆய்வில், விடுதலையாகி சென்ற கைதிகளுக்கு சம்பளம் வழங்காதது தெரியவந்தது.
இதுகுறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விசாரித்த போது, சம்பளம் வழங்கும் பணியை கவனித்த காவலர் அலெக்ஸ்பாண்டியன் ரூ.2 லட்சம் வரை கைதிகளுக்கு தராமல் தன் தேவைகளுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.