தனியுரிமை பாதிக்காத ஏ.ஐ., தொழில்நுட்பம்: நீதிபதி அறிவுறுத்தல்
தனியுரிமை பாதிக்காத ஏ.ஐ., தொழில்நுட்பம்: நீதிபதி அறிவுறுத்தல்
UPDATED : நவ 29, 2026 12:52 AM
ADDED : நவ 29, 2026 12:52 AM
மதுரை: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை மனித நலனுக்காகவும், தனியுரிமையை மதிக்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ்நிஷ் பாட்டில் பேசினார்.
மதுரை பாத்திமா கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது. செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர் பாத்திமா முஷரபா வரவேற்றார்.
நீதிபதி பேசியதாவது: நம் அரசியலமைப்பில் ‘தனியுரிமை’ என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தனியுரிமையை பாதுகாக்க அரசியலமைப்பு பிரிவு 21ன் கீழ் இடம் உள்ளது. தேசிய பாதுகாப்பு போன்ற விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே அரசு சட்டப்படி வரையறுக்கப்பட்ட அளவில் தனியுரிமையில் தலையிட முடியும்.
செயற்கை நுண்ணறிவு அதிகளவு தரவுகளை ஆய்வு செய்து செயல்படுகிறது. தனிப்பட்ட விவரங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை தவிர்த்து, மாணவர்கள் தொழில்நுட்பத்தை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இதற்கு தரவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம். மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் திறன் கொண்டது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சியையும், தனியுரிமை பாதுகாப்பையும் சமநிலையுடன் அணுகுவது அவசியம் என்றார்.
வழக்கறிஞர் அமலா ஆச்சரியம், வளன் சபை ஆலோசகர் பிஜி சிரியாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக போட்டி களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறுமலர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நான்சி நன்றி கூறினார்.
