/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கீகார நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் தனியார் பள்ளி சங்கங்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 30, 2024 04:59 AM
மதுரை: 'அங்கீகாரம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்' என மதுரையில் நடந்த தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம், இளம் மழலையர் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டம் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பொன்கருணாநிதி, செயலாளர் ராஜா, துணைத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மழலையர் பள்ளிகளை சமூக நலத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும், கல்வி ஜி.எஸ்.டி.,யை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நந்தகுமார் கூறியதாவது: இளம் மழலையர் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மழலையர் பள்ளிகள் முழுவதும் பெண்களால் நடத்தப்படுவதால் சமூக நலத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றார்.