ADDED : ஜன 02, 2025 05:31 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் விளையாட்டு நாள் விழா, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
நடந்தது.
கால்பந்து, எறிபந்து, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கராத்தே, சிலம்பம், யோகா, கபடி, ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களில் வென்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நான்காம் வகுப்பு மாணவர் சாய் அக்ஷத் , 6ம் வகுப்பு மாணவி கமலினி, ஏழாம் வகுப்பு மாணவர் பிரகதீஷ், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தர்ஷனா, லக்ஷனா, பத்தாம் வகுப்பு மாணவர் விவித் சத்திரியா, தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அமிர்தானந்தமயி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், ஜோதிர்மயி அணி இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
பள்ளி முதல்வர் சசிரேகா, கராத்தே மாஸ்டர் பொன்னுச்சாமி, ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கினர்.