ADDED : ஜூலை 28, 2025 05:09 AM
அலங்காநல்லுார : அலங்காநல்லுாரில் தமிழ்நாடு முக்குலத்தோர் நலச் சங்கம் சார்பில் சோழவந்தான் தொகுதியில் அரசுப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
கவுரவத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சோனை முத்து, செயலாளர் ஆதி முத்துக்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், இணைச் செயலாளர்கள் பாரதி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். தலைவர் சார்லஸ் ரங்கசாமி வரவேற்றார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் பரிசுவழங்கினார்.
எம்.எல்.ஏ.,வெங்கடேசன், வல்லப்பா கல்வி குழும நிறுவனர் வல்லப்பன், அ.தி.மு.க., விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,கருப்பையா, தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், பரந்தாமன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, அ.ம.மு.க. மாணவியரணி செயலாளர் ஜீவிதா நாச்சியார் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.

