நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரியில், வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவையொட்டி மாணவிகளுக்கான கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
மங்கையர்க்கரசி கல்விக் குழுமச் செயலாளர் அசோக்குமார், இயக்குநர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஆரோக்கிய பிரசில்லா வரவேற்றார். '2047ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் வந்தேமாதரம் பாடலின் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. வென்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் சவுமியா நன்றி கூறினார்.

