/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்டெர்லைட் ஆதரவு போராட்ட அனுமதி வழக்கு
/
ஸ்டெர்லைட் ஆதரவு போராட்ட அனுமதி வழக்கு
ADDED : மார் 25, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; தமிழக எழுச்சி தொழிலாளர் நலச்சங்க செயலாளர் தர்மர்.
இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மற்றும் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி துாத்துக்குடி எப்.சி.ஐ., கோடவுன் அருகே தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி நிராகரித்தனர். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.தனபால் தீர்ப்பிற்காக வழக்கை ஏப்.24 க்கு ஒத்திவைத்தார்.