sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சம்பளம் கொடுக்காததால் கொள்முதல் நிறுத்தம் 5 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்

/

 சம்பளம் கொடுக்காததால் கொள்முதல் நிறுத்தம் 5 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்

 சம்பளம் கொடுக்காததால் கொள்முதல் நிறுத்தம் 5 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்

 சம்பளம் கொடுக்காததால் கொள்முதல் நிறுத்தம் 5 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்


ADDED : பிப் 11, 2026 06:39 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: தெற்குத்தெரு கொள்முதல் நிலையத்தில் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்காததால் நெல் தேங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிகிறது.

இக் கிராமத்தில் 10 நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தெற்குத்தெரு சுற்றுவட்டார விவசாயிகள் கொண்டு வந்த நெல் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந் நெல்லை துாற்றி, எடை வைத்து, லாரியில் ஏற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் வேலையை நிறுத்திவிட்டு மையத்தில் இருந்து வெளியேறிவிட்டனர் என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டு.

விவசாயி மணிவாசகம் கூறியதாவது:

கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்து உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களாக குவித்து வைத்து காத்திருக்கிறோம்.

மூடைக்கு ரூ. 60 கமிஷன் கொடுத்தும் ஆட்கள் இல்லாததால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூடைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த நெல் முளைப்பதோடு, குருணையாக உடையும் அவலம் நிலவுகிறது.

எழுத்தரிடம் கேட்டபோது வேலைக்கு ஆட்கள் வருவதாக கூறியபடி காலம் கடத்துகிறார். கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறையால், வயலில் அறுவடை செய்ய வேண்டிய நெல்லும் வீணாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

எழுத்தர் விஜய் கூறுகையில், ''பொறுப்பாளர் ஹரி தலைமையில் வடமாநிலத்தவர் வேலை பார்த்தனர். சரிவர வேலை செய்யாததுடன், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கூடுதலாக அழைத்து வருமாறு கூறினேன். அதேசமயம் வேலை ஆட்களுக்குள் தகராறு ஏற்பட்டு, சிலர் வேறு இடத்தில் பணிக்கு சென்று விட்டனர். எனவே வேறு ஆட்களை அழைத்து வந்ததும் கொள்முதல் துவங்கும் என்றார்.






      Dinamalar
      Follow us