/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருத்துவமனையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி
/
மருத்துவமனையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி
ADDED : நவ 21, 2024 04:45 AM

மதுரை: தொடர்ந்து மழையும் துாறலுமாக உள்ள நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
டீன் அலுவலகம் செல்லும் வழியில் இடது பக்கம் பள்ளமாக உள்ள கட்டடத்தின் தரைப்பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீரும் மழைநீரும் தேங்கி நிற்கிறது. அதேபோல பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (எஸ்.எஸ்.பி.) வளாகத்தின் முன்பகுதியிலும் தண்ணீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது.
உட்பகுதி கட்டடங்களில் இருந்து தண்ணீர் குழாய்கள் வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் முழுமையாக வடியும் வகையில் சரிவாக அமைக்கப்படாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் டெங்கு கொசுக்களின் உற்பத்தியை தடுக்க முடியாது. இரண்டு வளாகங்களிலும் 24 மணி நேரமும் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களின் உற்பத்திக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உள்ளது.
நவம்பர், டிசம்பர் சீசனில் டெங்கு கொசுக்களால் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் மழைநீர் எங்கெங்கு தேங்கியுள்ளதென கண்டறிந்து வடிகால் வசதி செய்ய வேண்டும்.

