ADDED : ஜூன் 17, 2025 05:04 AM

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்துறைத் தலைவர் சத்தியமூர்த்திக்கு சர்வதேச அளவிலான 'திருக்குறள் உலக நுால் ஆய்வுப் பேரொளி' விருது வழங்கப்பட்டது.
சென்னை உலக திருக்குறள் மையம், லண்டன் வேர்ல்டு புக் ஆப் ரிக்கார்ட்ஸ் அமைப்புகள் சார்பில் 'திருக்குறள் உலக நுால்' என்ற பொதுத்தலைப்பில் உலக சாதனையாக ஒரே நாளில் 95 இடங்களில், 95 உப தலைப்புகளில், 95 நுால்கள் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.
நிறைவு விழா சென்னையில் திருக்குறள் மையத் தலைவர் மோகனதாஸ் தலைமையில் நடந்தது. உலக தமிழ் சங்க நிறுவனர் தலைவர் வி.ஜி. சந்தோஷம், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள், துபாய் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவர் முகமது முகைதீன் முன்னிலை வகித்தனர். நுால் வெளியீட்டு விழா பங்களிப்பை போற்றும் வகையில் பேராசிரியர் சத்தியமூர்த்திக்கு இவ்விருது வழங்கப்பட்டது. லண்டன், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.