ADDED : ஜூலை 27, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர்திருமலை நாயக்கர்கல்லுாரியில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது.
கவுரவ தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மதுரை மண்டல வைப்பு நிதி கமிஷனர் அழகிய மணவாளன் பேசினார். உதவி கமிஷனர் ஆதர்ஷ் கைமாத்தியா, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தனியார் பள்ளி, கல்லுாரி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.