/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காக்க...காக்க... கால்கள் காக்க...
/
காக்க...காக்க... கால்கள் காக்க...
ADDED : நவ 14, 2025 04:43 AM
ச ர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்கள் பிரச்னை 25 சதவீதம் வரும் வாய்ப்பு உள்ளது.
காலில் உணர்வு குறைவதால் காயங்கள் ஏற்படும்போது வலி தெரியாது. கால் உணர்வை விரல்தொடு பரிசோதனை மூலம் கண்டறியலாம் ஆறு இடங்களில் விரல்களில் தொட்டு அவற்றில் இரண்டுக்கு மேல் தெரியவில்லை என்றால் கால் பாதுகாப்பு உணர்வு குறைந்து விட்டது என்று அர்த்தம்.
கால் புண்கள் வராமல் தடுப்பது எப்படி கால்களை தினமும் கவனிக்க வேண்டும். முகத்தை பார்க்கும் கண்ணாடி போல் கால் பாதங்களை ஒரு கண்ணாடி மூலம் தினமும் பரிசோதிக்கலாம். கொப்பளம், வெட்டு கீறல் சிவந்து இருத்தல் வெடிப்பு, சேற்றுப்புண் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்
வெளியே சென்று வந்தால் மிதமான சூடு உள்ள தண்ணீரில் சோப்பு போட்டு கால்களை கழுவவும். விரல் இடுக்கில் ஈரப்பதமாகவோ மிகுந்த வறட்சியாகவோ இருக்கக் கூடாது வெறும் காலில் எப்பொழுதும் நடக்கக் கூடாது,
வீட்டில் இருக்கும் போதும் சாக்ஸ் அணிந்து கொள்வது நல்லது.
காலணிகள் லேசான கனத்துடன் இருக்க வேண்டும் (ஒரு ஜோடி 700 கிராம்)
அடி பாகம் கனமாக இருக்க வேண்டாம். குதி 5செ.மீ., க்கு மேல் இருக்கக் கூடாது. உள்பாகம் பஞ்சு போல் இருக்க வேண்டும். எம்.சி.ஆர்., பிளாஸ்டாசோல் போன்றவற்றால் செய்திருக்க வேண்டும்.
கால் புண் என்பது மாரடைப்பு வருவது போன்று ஒரு அவசர மருத்துவ பிரச்னை. உடனடியாக மருத்துவர்களிடம் காண்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் கால்கள் தளர்ந்து போகும்.
ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் கால் இழப்பை தவிர்க்கலாம்.
- டாக்டர் வி.பழனிகுமரன் மதுரை- 98421 21145

