/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பன்னீர்செல்வம்
/
தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பன்னீர்செல்வம்
தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பன்னீர்செல்வம்
தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பன்னீர்செல்வம்
ADDED : ஆக 26, 2025 04:03 AM
சென்னை: 'வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58வது கால்வாயில் தண்ணீர் திறக்க மறுக்கும், தி.மு.க., அரசை கண்டித்து, ஆக., 29ம் தேதி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள அணைகளிலிருந்து, ஆங்காங்கே உள்ள கால்வாய்களில், குறிப்பிட்ட தேதியில். பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கை. அந்த வகையில், வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 58வது பாசனக் கால்வாயில், பாசனத்திற்காக தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டிய நிலையிலும், தண்ணீர் திறக்க, தி.மு.க., அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பலமுறை மனுக்கள் அளித்தும், 58வது கால்வாயில், இது நாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, வைகை அணையிலிருந்து 58வது கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், ஆக., 28ம் தேதி காலை 9.30 மணியளவில், உசிலம்பட்டி நகராட்சி முருகன் கோவில் திடலில் ஆர்ப்பாட்டம் நடக்கும். எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.