/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

UPDATED : ஜூலை 10, 2024 10:57 AM
ADDED : ஜூலை 10, 2024 10:56 AM

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளித்துவந்த நிலையில், இன்று (ஜூலை 10) முதல் அது நிறுத்தப்பட்டு புதிய கட்டண விதிப்பு நடைமுறை அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் இதுவரை உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இந்த கட்டண விலக்கு நிறுத்தப்பட்டு மாதம்தோறும் ரூ.340 கட்டணம் இன்று முதல் அமலாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக.,வினர் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், ஆர்டிஓ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் ஆகாத நிலையில், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அந்த போலீஸ் வாகனத்தை அங்கிருந்து எடுத்து செல்லவிடாமல் பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.