தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 23, 2026 10:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 10:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பூ.குளத்துப்பட்டியில் குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தினால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நக்கலப்பட்டி ஊராட்சி பூ∙குளத்துப்பட்டி கிராமத்தில் குடிநீர், கழிவுநீர்கால்வாய், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் காலை 7.20 மணியளவில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி தாலுகா போலீசார் உரிய அதிகாரிகளை வரவழைத்து தீர்வு காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள், மற்ற வேலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதால் கலைந்து செல்லுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

மறியல் காரணமாக காலை 8.20 வரை ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us