UPDATED : ஜூன் 23, 2026 05:41 PM
ADDED : ஜூன் 23, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி:உசிலம்பட்டி நக்கலப்பட்டி ஊராட்சி பூ.குளத்துப்பட்டியில் குடிநீர், கழிவுநீர்கால்வாய், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி கிராமத்தினர் காலை 7:20 மணிக்கு மதுரை- = தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார், ‛‛அதிகாரிகளை வரவழைத்து தீர்வு காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள், மற்ற வேலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதால் கலைந்து செல்லுங்கள்'' என பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்துு மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் காலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
