ADDED : ஆக 20, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், மண்டபம், பந்தல் வாடகை, மைக்செட், மேஜை, நாற்காலிகள், வருகை தரும் அலுவலர்களுக்கான உணவு ஏற்பாடு உள்ளிட்ட செலவினங்களுக்கு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஒரு மணிநேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் பெரியகருப்பன், ஆசை உட்பட பலர் பங்கேற்றனர்.