/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2025 07:28 AM

உசிலம்பட்டி : வைகை, பெரியாறில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் உசிலம்பட்டி பகுதியின் நீராதாரமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உசிலம்பட்டி பகுதிக்கு மழை நீர் மட்டும் நீராதாரமாக இருந்தது. முப்பது ஆண்டு தொடர் போராட்டத்தால் 58 கிராம கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. கால்வாயில் தண்ணீர் திறக்கும் முன்பு, இந்த வட்டாரத்தில் 1000 அடிக்கும் கீழே சென்ற நிலத்தடி நீர்மட்டம், கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து கால்வாயில் தண்ணீர் திறந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. தரைமட்ட கிணறுகளில் தண்ணீர் வெளியேறும் அளவு இருந்தது.
தொடர் போராட்டம் வைகை அணையில் முழு கொள்ளளவு நீர் இருந்தால் மட்டுமே 67 அடி உயரத்தில் மதகு பகுதி உள்ள 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க முடியும். கடந்தாண்டு போதுமான அளவு தண்ணீர் இருந்தும் கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. இந்தாண்டு தொடர்ந்து நீர்மட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று ஓ. பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியம்மாள், பாசன விவசாய சங்கத் தலைவர் சின்னயோசனை, விவசாயிகள், கட்சியினர் தண்ணீர் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க அரசாணை, மதகின் மட்டம் 67 அடியாக உள்ளதை 62 அடியாகக் குறைக்க வேண்டும், தற்போது அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அணை முற்றுகை எம்.எல்.ஏ., அய்யப்பன் கூறியதாவது:
கால்வாயில் தண்ணீர் திறக்கும்படி கலெக்டர், அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் வரை மனு கொடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. கோரிக்கை மனுவுக்கு பதில் கூட தரவில்லை. தண்ணீர் திறக்காவிட்டால் விரைவில் வைகை அணையை முற்றுகையிடுவோம் என்றார்.