/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அச்சம்பட்டியில் குடிநீருக்காக மறியல்
/
அச்சம்பட்டியில் குடிநீருக்காக மறியல்
ADDED : ஜூன் 07, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அச்சம்பட்டியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 போர்வெல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மோட்டார் பழுதால் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. நேற்று காலை 30க்கும் மேற்பட்ட பெண்கள் திருமங்கலம் - சேடப்பட்டி ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.