ADDED : செப் 03, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் திருமதில் சந்து பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதியினர் அவதிப்பட்டனர்.
இதையடுத்து பெரிய ரதவீதியில் பா.ஐ., இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் தலைமையில் மறியல் நடந்தது.மாநகராட்சி உதவி பொறியாளர் இளங்கோ அவர்களிடம் சமாதானம் பேசி உடனே குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.