/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீரில் சாக்கடை கலப்பதால் மறியல்
/
குடிநீரில் சாக்கடை கலப்பதால் மறியல்
ADDED : ஜூலை 25, 2025 03:32 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 5 மாயாண்டித்தேவர் தெருவில் பாதி தெருவில் சாக்கடை வசதி இல்லாததால் உறிஞ்சி குழி அமைத்து கழிவுநீரை கடத்துகின்றனர். சில மாதங்களாக கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. குடிநீர் இணைப்புகளிலும் கழிவுநீர் கலக்கிறது என அப்பகுதியினர் நேற்று மதியம் 3:00 மணிக்கு மதுரை ரோட்டில் சாலை மறியலுக்கு முயன்றனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியதுடன், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
நகராட்சி பொறியாளர் சசிகுமார், கவுன்சிலர்கள் சந்திரன், தேவசேனா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பத்தாண்டுகளுக்கும் மேலாக தெருவில் ஆக்கிரமிப்பால் விரிவாக்க பணிகள் நடக்கவில்லை. விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றி ரோடு, கழிவுநீர் வடிகால் வசதி செய்ய வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். விரைவில் பணிகள் துவக்கப்படும் என அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.