ADDED : பிப் 13, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தியாகி வ.உ.சி., தனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலைக்காக ஈ.வெ.ராமசாமியிடம் மன்றாடியதாக தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா பேசியதை கண்டித்து மதுரையில் மறியல் செய்த வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்மண்டல அமைப்பாளர் அன்னலட்சுமி சகிலா தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிராஜ்மாதவன், மதன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராஜா உருவப்படத்தை எரித்தனர்.