ADDED : மார் 28, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் சார்பில் கே.புதுார் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் நுால்கள் வழங்கும் விழா ஆசிரியர் முகமது யூசுப் தலைமையில் நடந்தது. மதுரை செந்தமிழ்க் கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, எஸ்.பி.எம்., அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி, பாண்டியம்மாள் முன்னிலை வகித்தனர்.
மன்ற நிறுவனர் சங்கரலிங்கம் வரவேற்றார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கருணாகரன் நுால்களை வழங்கினார். ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், டாக்டர் ஜெயச்சந்திரன், பத்மநாபன், மூர்த்தி உட்பட பலர் பேசினர். இணைச் செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.