ADDED : ஜன 16, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் கல்வெட்டு குகைக்கோயில் பகுதிகளில் ஏராளமான குரங்குகளும், மயில்களும் உள்ளன.
பாரத மைந்தர்கள் பண்பாட்டு கழகம் சார்பில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அங்கு பொங்கல் வைத்து, குரங்குகள், மயில்களுக்கு நிலக்கடலை, சுண்டல் கடலை, பொரி கடலை, பழவகைகளை வழங்கினர். நிர்வாகிகள் மோகன்தாஸ், லட்சுமணன், அக்பர், சுப்புலட்சுமி, நசீர், ஜெய்லானி, நஸ்ரின் ஏற்பாடுகளை செய்தனர்.